சென்ற வாரம் நான் சென்னை போயிருந்தேன். சென்னை தமிழ் பேச்சு கேட்டவுடன்,
மனசுல ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... அப்புறம், சென்ட்ரல் புகை வண்டி நிலையத்தில்
மொதோ வேலையா போய் ஒரு ஆனந்த விகடனும், குமுதமும் வாங்கினேன்.
ஊர் சுத்தின டயம் போக, நல்லா ரென்டு புத்தகத்தையும் படிச்சேன்...
அதுலே, ஒரு கவிதை படிச்சேன். அதை படிச்ச உடனே, எதோ ஒரு பிழை இருப்பது போல
தோனிச்சு...
அந்த கவிதை, இதோ...
இடம் மாறினால் தூக்கம் வராது,
மனம் மாறினால் தூக்கம் போகாது...
இதை நம்ம எழுதிருந்தா எப்படி எழுதிருப்போம்னு யோசிச்சேன்,(கருத்து பிழை இல்லாமல் :-)),
இடம் மாறினாலும், மனம் மாறினாலும் தூக்கம் வராது...
எனக்கு தெரிந்த பிழை உங்களுக்கும் தெரிஞ்சுச்சா?
No comments:
Post a Comment