
மதுரை சிந்தாமணி டாக்கீஸ்:
அடியேனும், நண்பனும் சேர்ந்து "கஜினி" படத்துக்கு சென்றோம். 5 நிமிதம் கால தாமதமானதால் கொஞ்சம் சீன்ஸ் மிஸ் ஆயிடுச்சு. முதல் பாகம் நன்றாக இருந்திச்சு. இரண்டாம் பாகம் கடியை போட்ருச்சு. படத்துக்கு ஏன் அவ்வளவு கூட்டம்னு தெரியலை. நாங்க "கதை"க்காக தான் போனதுன்னு பொய் சொல்ல மாட்டேன். போனதே "அஸின்"ஐ பார்க்கத்தான். வேற எதுக்கு?
சரி, படத்தை கொஞ்சம் அலசுவோம்:
அ) படத்துக்கு ஏன் "கஜினி"னு பேர் வச்சாங்ன்னு தெரியலை. எனக்கு தெரிஞ்சு முகமது கஜினி, இந்தியாவை 17 முறைகள் போர் தொடுத்து, 17 முரைகளும் சூரை ஆடிற்கான்**.
ஆ) ஏன் இரண்டாவது வில்லன்னு தெரியலை. தமிழ் படத்துல இது எல்லாம் சகஜம் தானே ஃப்ரீயா உட்ருவோம்.
இ) கதை நல்லாதான் இறுந்துச்சு. "ஸ்க்ரீன் ப்லே" = சொதப்பல்.
ஈ) படம் எடுக்கிறப்போ 15 நிமிஸத்துக்கு ஒரு தடவை இயக்குனருக்கு கதை மறந்துடுச்சு "கோலி வூட்ல" ஒரே பேச்சு.
அஸினை பத்தி ஒரு வரி டமில்ல சொல்லனும்னாம், "She has done a wonderful job dude".
கஜினி - யாரவது ஃப்ரீயா கூட்டிட்டு போனா, ஒரு தடவை பார்க்கலாம்.
** - வந்தார்கள் வென்றார்கள் (மதன்)